2021ல் தமிழகத்திலும் பாருங்கள் யாராலும் நம்மை தடுக்கமுடியாது – குஷ்பூ

Khushboo tweeted that the BJP, which won just four seats in Hyderabad in 2016, now has 48 seats, the BJP's biggest growth.

ஹைதராபாத்தில் 2016-ல் வெறும் நான்கு இடங்களை பெற்ற பாஜக, தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி என குஷ்பூ ட்வீட் செய்துள்ளார்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 150  வார்டுகளில் 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது.  கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஹைதராபாத்தில் 2016-ல் வெறும் நான்கு இடங்களை பெற்ற பாஜக, தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி. ஐதராபாத் தேர்தலில் பாஜகவின் இந்த எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 2021ல் தமிழகத்திலும் பாருங்கள். யாராலும் நம்மை தடுக்கமுடியாது.’ என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.