தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுத்துகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவும்,
unknown nodeஇந்த ஊரடங்கு சமயத்தில் பேரிடா் மீட்பு பணிகளில் அரசியல் பாகுபாடின்றி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும். அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
unknown nodeஇதனை அடுத்து, கே.பி.ராமலிங்கம் திமுகவில் வகித்து வந்த விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த மாதம் 30ஆம் தேதி திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பாக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக (சஸ்பெண்ட் ) திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.