M.P ராஜேந்திரன் மரணம்..அதிமுக இரங்கல் அறிக்கை...!!

விழுப்புரம் மாவட்ட அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் விழுப்புரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அருகே

விழுப்புரம் மாவட்ட அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் இன்று விபத்தில் மரணமடைந்தார்.

அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் விழுப்புரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது அதிமுக தொண்டர்களை மிகவும் வேதனையடைய வைத்துள்ளது.

unknown node

இந்நிலையில் இந்த துயரசம்பவம் நிகழ்ந்ததையடுத்து அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக தலைமை கழகம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.