கோவில்களில் சாதி – நிற வேறுபாடு இருக்கவே கூடாது.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

கோவில்களில் சாதி , நிற ரீதியிலான பாகுபாடுகள் இருக்க கூடாது. என மதுரை உயநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

கோவில்களில் சாதி , நிற ரீதியிலான பாகுபாடுகள் இருக்க கூடாது. என மதுரை உயநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் கறுப்பர் கோவிலில் கும்பாபிசேஷகம் நடத்துவது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி இருந்தது.

அதில், அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்து தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற உத்தரவை தனி நீதிபதி அமர்வு அளித்து இருந்தது. இதனை எதிர்த்து மனுதாரர் மீண்டும் மேல்முறையீடு செய்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தந்து. அதனை விசாரித்த நீதிபதிகள், கோவில்களில் சாதி , நிற ரீதியிலான பாகுபாடுகள் இருக்க கூடாது.

கடவுளை நம்புகிறர்வர்களுக்கு கடவுள் சமமானவரே. அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்து தான் விழா நடத்த வேண்டும் என நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.