கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்களை சமூக விலகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்நிலையில் பொதுமக்களின் நலனுக்காக வேண்டி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, மதுரை மக்களுக்கு 250 ரூபாய்க்கு 8.5 கிலோ எடையுள்ள 8 வகையான காய்கறிகள் அடங்கிய பை கிடைக்கும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.