“மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக மாற்றுக”- அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோரிக்கை!

மதுரையை தமிழகத்தின் 2 -வது தலைநகரமாக மாற்றக்கோரி அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் அவர், தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை அறிவிக்கக்கோரி, என முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், இது தென்மாவட்ட மக்களின் ஓட்டுமொத்த விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரையில் சர்வதேச விமான நிலையம், நான்கு வழி சாலைகள் போன்ற வசதிகள் உள்ளது. முதலீட்டாளர்கள் பலரை ஈர்க்கும் வகையில், மதுரையை தமிழகத்தில் இரண்டாம் தலைநகரமாகலாம் என தமிழக சி.ஐ.ஐ. தலைவர் ஹரி தியாகராஜன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025