லோகோண்டா எனும் இணையத்தளத்தில் பெண்ணின் செல்போன் நம்பரை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தரமணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை லோகோண்டா என்ற இணைய தளத்தில் பதிவிட்டு, அவரை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த புலன் விசாரணையில் லோகோண்டா இணையதள தொடர்பு கொண்டு பெண்ணை பற்றி ஆபாசமாக பதிவிடுவது குறித்த தகவல்களை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சென்னை தரமணியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் மகன் சூரிய நாராயணனை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இணையதளங்களில் ஆபாசமாக இதுபோன்று பதிவு போடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…