ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்தவர் கொலை – 4 பேர் கைது!

Police have arrested four people in connection with the murder of a man who tried to rob an ATM machine in Thiruvarur district.

திருவாரூர் மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூரில் இயங்கி வரும் ஏ.டி.எம் மிஷினில் இரவு ஒரு மணி அளவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஏ.டி.எம்மை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளது. இதனையடுத்து அருகில் வசித்தவர்கள் சத்தம் கேட்டதால் எழுந்து வந்து அவர்களை பிடிக்க முயன்ற பொழுது, அவர்கள் நடத்திய தாக்குதலில் கூடூரை சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றதால் தான் தமிழரசன் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டுபிடுத்துள்ளனர். எனவே, கொள்ளை மற்றும் கொலை செய்த மதன், பிரதாப், ஆகாஷ் மற்றும் விஜயன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன் மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.