மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை தொங்கியது..ஊரடங்கில் தளர்வு வெளியாகுமா.?

தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா.? அல்லது தளர்வுகள் வழங்குவதா..? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை தொடங்கியது.
நேற்று மத்திய அரசு மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், யோகா, உடற்பயிற்சி கூடங்கள் இயங்க மத்திய அரசு அனுமதித்த நிலையில், தமிழகத்தில் அனுமதிக்கப்படுமா..? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக்கு பின்னர் , பேரூராட்சி, நகராட்சிகளில் கோவில்கள் திறக்கப்படுமா..? இ-பாஸ் முறை தொடருமா..? பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படுமா..? கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்படும் நேரத்தில் மாற்றம் போன்றவை தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.