9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி:

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு கனமழை:

அடுத்த 24 மணி நேரத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், நவம்பர் 20, 21ம் தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை நிலவரம்:

சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்எ ன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.