" மக்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யும் தேர்தல் அறிக்கை " அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...!!

தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக , பாமக கூட்டணி முடிவாகியுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை  பூர்த்திசெய்யும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை விளங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் , டெல்லியில் நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்க சென்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், தீப்பெட்டி உள்ளிட்ட 70 பொருட்களுக்கான வரிவிதிப்பை குறைக்கவும், வரி விலக்கு பெறவும் வலியுறுத்த இருக்கின்றோம் , பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும்  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.