தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை – விஜயபாஸ்கர்

Minister Vijayabaskar has said in an interview that there is no chance of implementing a full curfew in Tamil Nadu again

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என  அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை முயற்சியால்கொரோனாதொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றார்.