தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை ...!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. திருவள்ளூர்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்தது.சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், மாங்காடு, பூவிருந்தவல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.திருச்சியில் லால்குடி, கல்லக்குடி, சமயபுரம், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்  மழை  பெய்தது .திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.  நாகையில் வேதாரண்யம், தலைஞாயிறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.