பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.இதற்காக இன்று அவர் தமிழகம் வந்துள்ளார்.
நேற்று முதலே சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் #MaduraiThanksModi என்று ஹேஷ் டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.
unknown nodeஇந்நிலையில் சமூக வலைத்தலமான ட்விட்டரில் இன்று #GoBackModiஎன்ற ஹேஷ் டாக்கும், #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்கும்,#TNWelcomesModi என்ற ஹேஷ் டாக்கும் போட்டி போட்டு ட்ரெண்டாகி வருகிறது.ஆனால் #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.