அம்மா 40 தொகுதிகளிலும் தனித்து நின்றது போல் தனித்து நிற்போம்- தினகரன்

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக-

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில்  பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சு நடைபெற்றது.

அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

அம்மா 40 தொகுதிகளிலும் தனித்து நின்றது போல் தனித்து நிற்போம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் கருத்து  தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பலவீனமான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகும் .அதிமுக ஆட்சி குறித்து விமர்சித்த பாமகவுடன் கூட்டணி வைப்பதை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது.அம்மா 40 தொகுதிகளிலும் தனித்து நின்றது போல் தனித்து நிற்போம்.

அம்மா நினைவிடம் அமைக்க எதிர்த்தவர்களுடன் கூட்டணியா?… மக்கள் கூட்டம் இவர்களின் வெள்ளி, காசுக்கு அடிபணியாது. இந்த கூட்டணியை 40 தொகுதிகளிலும் தோற்க்கடிப்போம்.

அதிமுக-பாமக-பாஜக அனைவரும் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கி உள்ளனர், தோற்கப் போகும் கூட்டணி என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.