முருகனுக்கு பேச்சுரிமை உள்ளது – அமைச்சர் ஓ.எஸ் மணியன்

Tamil Nadu BJP state president L Murugan has the right to speak. Minister OS Maniyan said that it has been fully utilized.

எல் முருகனுக்கு பேச்சுரிமை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அரியலூரில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றும் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என பேட்டியளித்திருந்தார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலர் எல் முருகனுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறிருந்தது குறித்த கேள்விக்கு, அவருக்கு பேச்சுரிமை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என மயிலாடுதுறையில் அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.