நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கீழே விழுந்ததில் தலையில் காயம்.., மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் இருந்தபோது கீழே விழுந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Ganesan - Nagaland Governor

சென்னை :நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் இன்று (ஆகஸ்ட் 8, 2025) காலை கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.