அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் !! புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!!

puthiya tamilkam party in AIADMK Alliance A block allocation for the puthiya tamilkam party !!puthiya tamilkam katchi athimukavudan kottani

அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

unknown node

இந்நிலையில் இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்றார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது.அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,  மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்று  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை புதிய தமிழகம் கட்சி தமிழகத்தில் திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக அக்கட்சி தனது நிலைப்பாடுகளை மாற்றியது.ஆனால் கூட்டணி தொடர்பான முடிவில் அதிமுக -பாஜக ஒதுக்கி வந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.