தமிழகத்தில் 5 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தில்  சென்னை,நெல்லை, ராமநாதபுரம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை

தமிழகத்தில்  சென்னை,நெல்லை, ராமநாதபுரம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து மற்ற நான்கு மாவட்டங்களிலும் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.