#BREAKING: நிவர் புயல் 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.!

The storm,has been moving in one place for the past 3 hours. The storm is expected to cross the coast tomorrow evening.

3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்.

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால், நிவர் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்து விட்டது.

தற்போது, இந்த புயலானது புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் காரைக்கால்- மாமல்லபுரம் அதனை ஒட்டிய புதுச்சேரி பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.