"நம்ம ஊரு திருவிழா"வில் பங்கேற்க விதிமுறைகள் அறிவிப்பு!

கலை பண்பாட்டுத்துறை வழங்கும் “நம்ம ஊரு திருவிழா”வில் பங்கேற்க விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு.

கலை பண்பாட்டுத்துறை வழங்கும் “நம்ம ஊரு திருவிழா”வில் பங்கேற்க விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு.

2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் கலை பண்பாட்டுத்துறையால் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னை மற்றும் பிற இடங்களில் நடக்க உள்ள நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் நிமிட 5 வீடியோவை பதிவு செய்து 13ம் தேதிக்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது எனவும் தேர்வு குழுவின் முடிவே இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node