தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 16 பள்ளிகளில் 214 மாணவ, மாணவிகள் மற்றும் 16 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது கும்பகோணத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த மாணவர்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர். சிகிக்சை பெற்று வந்த 120 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பரவல் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.