பணியிடை நீக்கம் செய்ததால் செவிலியர் தற்கொலை..

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சார்ந்தவர் கார்த்திகா. இவர் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு செவிலியர் உதவியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் மதுரையை அடுத்த பரவையை சார்ந்த தனக்கொடி என்பவரின் உறவுக்காரப் பெண் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையை உறவினர்களும் காட்டுவதற்கு கார்த்திகா ரூபாய் 1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனிக்கொடி புகார் கொடுத்துள்ளார். பின்னர் அரசு மருத்துமனை முதல்வர் சங்குமணி நடத்திய விசாரணையில் கார்த்திகா லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி முதல்வர் சங்குமணி கார்த்திகாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்த நிலையில் மனஉளைச்சலில் இருந்த கார்த்திகா நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திலகர் திடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025