ஓ.பன்னீர் செல்வம் நல்ல முடிவு எடுப்பார் – அண்ணாமலை ஸ்பீச்!

செல்வப்பெருந்தகை ஏன் குளிர் ஜுரம் வந்த மாதிரி சுற்றிக்கொண்டிருக்கிறார் எனவும் அண்ணாமலை விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

ops annamalai

சென்னை :தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து சமீபத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். ரஹ்மான் சினிமா துறையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அளித்த பேட்டியில் ஒரு வரியை எடுத்துக்கொண்டு சிலர் தேவையில்லாமல் பிரச்னை செய்கிறார்கள் என்று அண்ணாமலை விமர்சித்தார்.

அண்ணாமலை மேலும் கூறுகையில், “ஏ.ஆர். ரஹ்மான் ஒரு இசைமேதை. தமிழத்தின் அடையாளம். இந்தியாவில் ஆஸ்கர் விருது வாங்கிய ஒரே இசையமைப்பாளர். எங்கு போனாலும் தமிழில் பேசுபவர். ‘எல்லா புகழும் இறைவனுக்கு’ என்று சொல்லி நம்மை பெருமைப்படுத்துபவர்” என்று ரஹ்மானை பாராட்டினார்.

ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு ஹான்ஸ் சிம்மருடன் இசை அமைக்கிறார் என்றும், அவர் எல்லா விதமான படங்களுக்கும் இசை அமைப்பதாகவும் குறிப்பிட்டார்.பாஜகவுக்கும் ரஹ்மானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய அண்ணாமலை, “அவர் மீது பாஜகவுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. இதில் திமுக எம்பி கனிமொழிக்கு என்ன தான் பிரச்னை?” என்று கேள்வி எழுப்பினார்.

ரஹ்மான் விளக்கம் கொடுத்த பிறகு இந்த பிரச்னை முடிந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.கிரியேட்டிவ் துறையினரை புண்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்திய அண்ணாமலை, “அவர்கள் மக்களை மகிழ்விக்க வேண்டும். ஒரு வரியை எடுத்துக்கொண்டு பிரச்னை செய்வது சரியல்ல” என்று தெரிவித்தார்.

ரஹ்மானின் கருத்து சினிமா துறையில் அதிகார மாற்றம் குறித்த அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதை சரி தவறு என்று தான் சொல்லவில்லை என்றும் அவர் விளக்கினார்.இந்த பேட்டி தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஹ்மான் குறித்த சர்ச்சை திமுக – பாஜக இடையேயான அரசியல் விவாதமாக மாறிய நிலையில், அண்ணாமலையின் நடுநிலை அணுகுமுறை பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. ரஹ்மான் மீதான பாஜகவின் நிலைப்பாடு தெளிவாகியுள்ளது.