ஆன்லைன் ரம்மி; திருச்சியில் மேலும் ஒருவர் தற்கொலை.!

திருச்சி மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வில்சன் என்பவர் தற்கொலை செய்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வில்சன் என்பவர் தற்கொலை செய்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து, அதனால் தற்கொலைகள் நிகழ்வது அதிகமாகி வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

திருச்சி, மனப்பாறைக்கு அருகே அஞ்சல்காரன்பட்டியைச்சேர்ந்த கூலித் தொழிலாளி வில்சன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட வில்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான, தடை சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.