பணியிலிருக்கையில் உயிரிழந்த நெல்லை காவலர் – 21 குண்டு முழங்க அஞ்சலி!

நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும்

நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, முரளிதரன் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த உதயகுமார் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான பணகுடிக்கு இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணகுடியில் உள்ள மயானத்தில் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

unknown node

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் உயிரிழந்த காவலரின் உடலை சுமந்து சென்றுள்ளனர். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள், உயிர் இழந்த உதயகுமார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவர் மீது போர்த்தப்படும் இந்த தேசியக் கொடியானது அவர் மகன் முத்தையா முரளியிடம் ஒப்படைக்கப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.