சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதனையடுத்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது. இந்த விவகாரம் பெரிதாகச் சர்ச்சையாக வெடித்த நிலையில், சினிமா பிரபலங்கள் சிலர் நகைச்சுவையாகப் பேசுவது போல் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக, மெய்யழகன் படத்தின் […]
திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய 6 இளைஞர்கள் வேலை தேடி இந்தியா வந்துள்ளனர். மேலும், இவர்கள் 6 பேரும் கவுகாத்தி வழியாக திருப்பூருக்கும் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 6 இளைஞர்களும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கூலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்த்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்,நேற்று அந்த இளைஞர்கள் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு […]
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின் ஆய்வு முடிவில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு , பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்ததாக கூறப்பட்டது. கோயில் பிரசாத லட்டுகளில் விலங்குகளின் மாமிச கொழுப்புகள் கலந்ததாக எழுந்த குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி அண்மையில் ஒரு […]
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘சத்யம் சுந்தரம்’ எனும் பெயரில் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் ரிலீசாக உள்ளதால், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்வில் நடிகர் கார்த்தி , இயக்குனர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தொகுப்பாளர், […]
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கோவை கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, […]
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர் மேத்தாவிற்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், இந்த விருதுடன் சேர்த்து ரூ.10 ரொக்கமும் மற்றும் நினைவுப் பரிசும் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் […]
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நலத்திட்ட நிகழ்வை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறுகையில், “கொளத்தூர் எனது சொந்த தொகுதி., எப்போது நினைத்தாலும் இங்கு வந்து செல்வேன்” எனக் கூறினார். பின்னர் அவரிடம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்று […]
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த என்கவுண்டர்கள், ரவுடி சுட்டுக்கொலை செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே, காவல்துறையினரின் ‘கடும்’ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன எனக் கூறப்படுகிறது. சென்னை புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்றபிறகு இதுவரையில் சென்னையில் மட்டும் 3 ரவுடிகள் போலீஸ் […]
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி, சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி லட்டு விவகாரம் பற்றியும், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலப்பதாகவும் பேசியிருந்தார். அவர் லட்டு விவகாரம், பற்றிப் பேசியது ஒரு பக்கம் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில். மற்றொரு பக்கம் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலப்பதாகக் கூறியது […]
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…! கோவை ஆர்.எஸ்.புரம் : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி […]
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் இன்று நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டும் நபராக சீசிங் ராஜா இருந்ததாகவும், அந்த வழக்கில் தான் இவர் கைது செய்யப்பட்டார் […]
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைதாகியுள்ளனர். ரவுடி திருவேங்கடம் என்பவர் இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி […]
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சொல்லப்போனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என இந்த ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். இந்த சுழலில் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் ரத்து செய்யப்படுவது வழக்கம். […]
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்… கோவை நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி சென்னை கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா […]
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், கட்சி மூத்த நிர்வாகிகள் உட்பட சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். இன்றைய பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிரந்தரத் தலைவராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டது, தேர்தல் வயதை குறைக்க வலியுறுத்துவது, தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. […]
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் முடிந்து நடைபெறும் ம.நீ.ம கட்சியின் முதல் பொதுக்கூட்டமான இதில், கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அதில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருந்ததும் அக்கட்சி தலைவர் விஜயின் புகைப்படம் தான். தற்போது இருப்பதும் அதே விஜயின் புகைப்படம் தான். ஆனாலும் , இந்த புகைப்பட மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக, தொகுதி வாரியாக நல்ல மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் சரி, மற்ற சில விழாக்களிலும் சரி, விஜய் […]
சென்னை : தேர்தல் 2024 மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் கலந்துகொண்ட அவர் பாஜகவால் பல கட்சிகள் காணாமல் போனதாக விமர்சித்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஒரு மிஸ்ட் கால் கொடுத்தாலே பாஜகவில் சேரலாம் என விளம்பரம் செய்தார்கள். ஆனால், இறுதியாக தன்னுடைய சொந்த காலில் நிற்கமுடியாமல் இன்று சந்திரபாபு நாயுடு மற்றும் […]
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததாக உணவுப்பொருள் ஆய்வுக்குழு கூறி முதலமைச்சரின் குற்றசாட்டை உறுதிப்படுத்தியது. திருப்பதி கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்ததாக கூறப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பேசு பொருளாக மாறியது. மேலும், நேற்று திருப்பதி தேவஸ்தானம் […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல் வட்டாரம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இது குறித்த கேள்விகளும் ஆங்காங்கே பல்வேறு பிரமுகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு ஆதரவாகவும், விமர்சனம் தரும் வகையிலும் பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம் , ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.?’ என செய்தியார்கள் கேட்கையில் […]