Election2024 : மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னமும், மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் , விசிக மற்றும் மதிமுக […]
Election2024 : திமுக வேட்பாளர் செல்வகணபதி, பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு சட்டவிரோதமானது என அதிமுக புகார். கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி மற்றும் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரின் வேட்புமனுக்கள் பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட இருவரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டது குறித்து அதிமுக குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். வேட்புமனுக்களை ஏற்றது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் கிறது […]
Annamalai : ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் செய்யும் போது இந்தி எதிர்ப்பு பற்றி தவறாக பேசியதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வருவதால், தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் களைகட்ட ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் மற்ற கட்சிகள் பற்றி காரசார விமர்சனங்ளை முன்வைத்து வருகிறார்கள் ஸ்ரீபெரும்புதூரில், பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் வேணுகோபால் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று […]
Election2024 : முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதன் காரணமாக தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள். – சேகர்பாபு. இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார். […]
MK Stalin : மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நபுவார்கள்.? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளின் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். நமோ எனும் […]
ADMK: தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் […]
EXAM : தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம். தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதேபோல மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு 25 தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது. இதுபோன்று, கடந்த 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், 1 […]
Annamalai: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததாக வீடியோ பரவிய விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம். மக்களவை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பது […]
C.M. Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாரா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி. தர்மபுரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன்படி தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள தடங்கம் ஊராட்சி பகுதியில் தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் […]
Annamalai : பிரச்சாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்கு அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ குறித்து தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த உள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 வார காலமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும்போது வாக்காளர்களிடம் பணம் கொடுப்பது போன்ற ஏதேனும் வீடியோ வெளியாகி விடுகிறது. பிறகு அதன் உண்மை தன்மையை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்து […]
Public Exam: ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இன்றே […]
Tamilisai Soundararajan: ஏன் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனது குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தென் சென்னை தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன், தான் 5 முறை […]
TR Balu: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக எம்பி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அப்போது, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு […]
South Chennai : தென்சென்னையில் தமிழிசை போட்டியிடுவதை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன். தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் […]
Election2024 : திமுக, அதிமுக, பாஜக ஆகியவை நேரடியாக 9 தொகுதிகளில் மோதுகின்றன. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் நிறைவு பெற்று நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் போட்டியிட மொத்தம் 1503 […]
Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை தமிழ்நாட்டில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இருக்கும் நிலையில், நாம் தமிழர் தன்னிச்சையாக களம் இறங்கியுள்ளது. இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் […]
EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். […]
Chennai: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு. சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பிரபலமான தனியார் மதுபான விடுதி அமைந்துள்ளது. இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் மதுபான விடுதியில் பணியாற்றிய […]
Thirumavalavan: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி ஆரம்பித்து நேற்று வரை நடந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை முடிந்தது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை […]
Two Leaves Symbol: ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு.. இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு ஒதுக்கீடு இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை நிராகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக சின்னம், பெயர், லெட்டர்பேடு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அதிமுகவின் இரட்டை […]