EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். […]
Chennai: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு. சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பிரபலமான தனியார் மதுபான விடுதி அமைந்துள்ளது. இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் மதுபான விடுதியில் பணியாற்றிய […]
Thirumavalavan: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி ஆரம்பித்து நேற்று வரை நடந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை முடிந்தது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை […]
Two Leaves Symbol: ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு.. இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு ஒதுக்கீடு இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை நிராகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக சின்னம், பெயர், லெட்டர்பேடு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அதிமுகவின் இரட்டை […]
Annamalai : தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேட்புமனுக்களை ஏற்கப்பட்ட நிலையில், சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ஒருசில வேட்புமனுக்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டது. இந்த சூழலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு […]
Election2024 : தேர்தலில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியை தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னைலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லையிலும் போட்டுயிடுகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா […]
Election2024 : தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு பெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதன்படி, தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு […]
Election2024 : தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விசிக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போலவே சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிக போட்டியிடுகிறது. கடந்த முறை விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியன் (திமுக) சின்னத்திலும், சிதம்பரத்தில் திருமாவளவன் விசிக சின்னமான பானை சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் பானை […]
TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட இடங்களில் உள்ள 90 காலிப்பணியிடங்களை நிரப்பு நடப்பாண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அடுத்த […]
TVK : விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதனை தொடர்ந்து அண்மையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கும் போதே, அவரின் […]
Ganesha Moorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 3வது முறை எம்பியாக இருந்து வந்த நிலையில், ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி சிட்டிங் எம்பியாக இருந்து வந்தார். இந்த சூழலில் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் […]
C.M.Stalin: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன், விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என மு.க. ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் […]
Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை இன்று நடைபெற்றது. அதே போல பெங்களூரில் நடைபெற்ற சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்கள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. அந்த […]
VCK: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை […]
Election2024 : இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இன்று பிற்பகலுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். விசிக தலைவர் தொல் திருமாவளவன், […]
Thoothukudi Firing : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.? என உயர்நீதிமன்றம் கேள்வி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது , கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இந்த போராட்டம் மாபெரும் பெரும் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், […]
OPS: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6-வதாக மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுர தொகுதியில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் […]
Election2024 : தமிழகத்தில் தற்போது வரையில் 837 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் , புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் கன்னியகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆகியவைகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டமாக நடைபெறும் இந்திய மக்களவை தேர்தலில் இதுதான் முதற்கட்ட தேர்தல் என்பதாலும், நாட்கள் மிக குறைவாகவே இருந்ததாலும் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக […]
Thanga TamilSelvan: வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கம்பம் […]
Nomination: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்தவகையில் […]