நான் 5 முறை தோற்றத்துக்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த தமிழிசை!

Tamilisai Soundararajan: ஏன் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனது குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan: ஏன் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனது குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தென் சென்னை தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன், தான் 5 முறை தேர்தலில் தோற்றத்துக்கான காரணத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது, தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால்தான் 5 முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன். இதனால் தேர்தலில் நிற்க பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தில் எதார்த்தமான உண்மை இருக்கிறது என தெரிவித்தார்.

என்னிடம் பணம் இல்லாததால் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழிசை இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே, தமிழிசை கூறியதாவது, பணம் கொடுத்துதான் தமிழகத்தில் பல இடங்களில் ஓட்டுகளை வாங்குகிறார்கள். இதனால் பணம் இல்லாததால் தான் நான் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனேன்.

தேசத்திற்கு பிரதமர் மோடி கேரண்டி, தென் சென்னைக்கு தமிழிசை அக்கா கேரண்டி. எப்படி ராமருக்கு அனுமரோ, அதுபோல பிரதமர் மோடிக்கு நாங்களெல்லாம் என்றும் தமிழிச்சி தங்கபாண்டியனும், ஜெயவர்தனும் தேர்தலுக்கு பிறகு முன்னாள் எம்பிக்களாகவே இருப்பார்கள் எனவும் விமர்சித்தார்.