நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்,உச்சஉயர் தீவிர புயலாக உள்ள ஃபானி சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயலின் வேகம் மணிக்கு 205 கி.மீ. வரை அதிகரிக்கும். சென்னையில் வானம் […]
அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.மேலும் 3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல் சபாநாயகர் […]
நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . […]
4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மே தினத்தையொட்டி கட்சி கொடியை ஏற்றினார் விஜயகாந்த்.அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும். தங்கம் வென்று தமிழகத்திற்கு […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில்,வேலூர் மக்களவை தொகுதி தேர்தலையே நடத்த முடியாதபோது திமுக பொருளாளர் துரைமுருகன் எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார். மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. தூத்துக்குடியில் […]
இலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் 4-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னும் இலங்கையில் பதற்றம் குறைந்தபாடு இல்லை.தொடர்ந்து பதற்றநிலையிலே உள்ளது இலங்கை. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக, சென்னையில் 4 பேரிடம்,தேசிய […]
4 தொகுதி இடைத்தேர்தலுக்கு 152 வேட்புமனுக்கள் ஏற்பு, 104 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு 152 வேட்புமனுக்கள் ஏற்பு, 104 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது […]
எதுவாகிலும் அதிமுக சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். பின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்தார்.இது தொடர்பாக […]
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று முதல் (மே 1ம் தேதி) ஜூன் 2 தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .வழக்குகள் மீது புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 12 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்துள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் […]
3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் . அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.மேலும் அதிமுக-வுக்கு எதிராக 3 பேரும் செயல்பட்டதாகவும் புகார் கூறினார். இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது . நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று […]
ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ. 309.37 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது . கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆனால் அதேபோல் தற்போது ஃபானி என்ற புயல் உருவாகியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ள பானி புயல் இன்று தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் ஃபானி […]
கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில் கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 […]
4 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொறுப்பாளர்கள் […]
நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் உடன் சென்றிருந்தனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் பதவி வேண்டியும், மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மக்களவை உறுப்பினர் பதவி வேண்டியும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்துள்ளதாக அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]
தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் .மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை சிலர் மிரட்டியதாக ஜோதி நகர் பார் நாகராஜ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் […]
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .வழக்குகள் மீது புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 12 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதேபோல் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் அவசர முடிவுகளுக்கு ஆட்பட்டு விடாமல் தங்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.