மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நடக்கும்போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது . மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக […]
அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில் எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ள நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட துரைமுருகன், அந்த அறிக்கையில், எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டிய இடத்தில் அமர்த்திருக்கின்ற எடப்பாடி பழனிசாமி எதுவும் தெரியாத சராசரி மனிதனை போல நடந்து கொள்வது கேலிக்குரியதாகும் என தெரிவித்துள்ளார். மேலும், எங்களுக்கு சொந்தமான இடங்களில், 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை தென்பரங்குன்றம் பகுதியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உள்ள அதிமுக அரசால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கூறவில்லை, ஓபிஎஸ் கூறியுள்ளார் என விமர்சித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட குலையன்கரிசல் போடம்மாள்புரம், கூட்டாம்புளி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்கள் ஆட்சியின் மீது நல்ல எண்ணத்தில் இருக்கின்றனர் என்றும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனையை அதிமுக அரசு விரைவில் நிறைவேற்றி கொடுக்கும் என்றும், மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரச்சாரத்தை 3 நாட்களாக அதிகரித்ததில் அவருடைய பயம் […]
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நட்புரவோடு ஏற்பட்ட கூட்டணி என்றும், தினகரன் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், மக்களுக்கு ஸ்டாலின் மீதும், திமுக மீதும் நம்பிக்கை இல்லை என்றும், அதனால் தான் ஸ்டாலின் தூத்துக்குடியில் வாக்கிங் எல்லாம் செல்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கனிமொழி தூத்துக்குடியில் நிச்சயம் வெற்றி பெறப்போவதில்லை, திமுகவும் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒட்டப்பிடாரம் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து பிரஸாகரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் இருந்து இறங்கி 8 ஆண்டுகள் ஆன நிலையிலும் மக்கள் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், அதிமுக அரசு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்த விவகாரத்தில், தி.மு.க.வும், அ.ம.மு.கவும் கொந்தளிப்பதாகவும், இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் தெரியவருவதாகவும் கூறியுள்ளார்.
ஒடிசாவில் இன்று ஃபானி புயல் கடற்கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ஃபானி புயல் மணிக்கு சுமார் 17-200 கி. மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஃபானி புயல் காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று 5 விரைவு ரயில்கள் ரத்து சந்திரகாச்சி […]
அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த 185 பக்கங்கள் கொண்ட நோட்டீஸில் பல்வேறு மாநிலங்களில் கட்சி தாவலில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , பல்வேறு வழக்குகள் உள்ளனர். மேலும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில் எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. […]
நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீர்நிலைகள் குறித்து நீதிபதிகள் கூறுகையில், நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் பாட்டில்களில்தான் எதிர்கால சந்ததியினர் நீரை பார்க்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இலவசங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதில் வீணாகும் நீரை சேமிக்க அரசு அணைகளை கட்டலாம் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் ,சூலூர் ஆகிய 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்நிலையில் வருகின்ற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் 63 பேர் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் 37 பேர் போட்டியிடுகின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதி […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளர் மகேந்திரனை, ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில், விவசாயிகள், பொதுநல சங்க நிர்வாகிகள் மற்றும் உப்பள தொழிலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை, உப்பள தொழிலாளர்களுக்கான பிரச்னை போன்றவற்றை மக்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கட்சிகளை மறந்து இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமாக இருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை, எங்களை விட மக்களுக்கே அதிகமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில், சண்முகய்யா என்பவர் போட்டியிடுகிறார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சண்முகய்யாவை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திமரப்பட்டியில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடி வருகிறார்.
கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஏற்கனவே அதிமுக சார்பில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 இலட்சம் மற்றும் 4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோமதிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசு என […]
+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது நாடு முழுவதும் சுமார் 31லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மே 3 வது வாரம் வெளியாக இருந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. cbse.nic.in . என்ற இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் http://cbse.examresults.net , http://cbseresults.nic.in , http://results.gov.in . என்ற இணையத்திலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் காரிபட்டியில் சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் .இவர் மீது பல வழக்குகள் உள்ளனர். போலீசாரின் பிடியில் சிக்காத கதிர்வேலை தேடி போலீஸ் சென்றனர். இந்நிலையில் இன்று காலை கதிர்வேலை சுற்றிவளைக்கப்பட்ட போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். ஆய்வாளரை தாக்கிய கதிர்வேல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த சம்பவத்தில் கதிர்வேல் உயிரிழந்தார்.இதுவரை 30 ரவுடிகள் […]
அமமுக – திமுக இடையேயான உறவு வெளிப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.பின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்தார். இந்நிலையில் […]
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரலுடன் 5 ஆண்டுகால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான […]