தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக,இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக,நீலகிரி,கோவை,திருப்பூர்,திண்டுக்கல்,தேனி,கன்னியாகுமரி, தென்காசி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் […]
சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்று கூறப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில்,கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சியில் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 12-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை […]
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் பொது இடங்களில் குப்பையை வீச வேண்டாம். மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பை,மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நம்மை சுற்றி இருக்கும் பகுதியை நாம் தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் குப்பை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில்,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதற்காக,அரசு சார்பில் சென்னையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அந்த வகையில்,இன்று காலை 7.30 மணியளவில் கோபாலபுரத்தில் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.இதனைத் […]
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் பொது இடங்களில் குப்பையை வீச வேண்டாம். மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நம்மை சுற்றி இருக்கும் பகுதியை நாம் தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் குப்பை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் […]
தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்வு. தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உள்ளது. இதுபோன்று இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 34,17,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், குறிப்பாக இன்று இறந்தும் எதும் பதிவாகவில்லை என்றும் […]
கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சில அறிவுறுத்தலை வழங்கினர். அதில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிகளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த […]
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மனவர்களுக்கு இலவச கல்வி என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் http://unom.ac.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் 2010-2011 கல்வியாண்டிலிருந்து “மெட்ராஸ் யுனிவர்சிட்டி […]
கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு. 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கவுள்ளார். திருச்சியை சேர்ந்த ஐ.சண்முகநாதன் 1953-ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக […]
தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவர் திருமுருகன் (வயது 17) என்பவர் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என தகவல் கூறப்பட்டியிருந்தது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனமாடிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வேலுசாமி உடன் இணைந்து அமைச்சர் சக்கரபாணி நடனம் ஆடினார். கிராம மக்களின் அன்பு கோரிக்கையை ஏற்று இருவரும் டான்ஸ் ஆடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களை மகிழ்வித்தனர். இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தனது ட்விட்டர் […]
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் உடன் உள்ளனர். துணைவேந்தர் நியமனம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சுமார் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், நிலுவையில் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 6 பேர் […]
த்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின், தம் தந்தையிடமிருந்து உழைப்பையும், சித்தாந்தத்தையும் வரித்துக் கொண்டு பம்பரமாகச் சுற்றுகிறார் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டப் பேரவையில் ஒரு தடவை சொன்னார், “மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான்” என்றார். அத்தகைய ஒருவர் எல்லா வகையிலும் உச்சத்தைத் தொட்டார் என்றால் அதற்குக் […]
கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு. தமிழகத்தில் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம், ஆனால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என […]
மக்களுக்கு பயன் அளிக்கும் எனில் புதிய யுக்திகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் நாளான நேற்று 19 அரசு துறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்றும் 19 […]
ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர் பேட்டி. கடந்த 2021-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் 69-வது ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றார். மதுரை மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பாக நிதி தட்டுப்பாடு, மாநகராட்சி திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கார்த்திகேயன் ஆணையராக பதவியேற்றது முதல் குடிநீர், பாதாள சாக்கடை, […]
சோனியா காந்தி அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சோனியா காந்தி அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால், பொது வாழ்வில் உள்ள […]
இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட். இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்று தனது 80வது அகவையில் அடியெடுத்து வைக்கும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், தன்னுடைய இசையால் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவருமான இசைஞானி திரு.இளையராஜா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! […]
முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.குறிப்பாக,நீட் விலக்கு மசோதா,துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,நீட் விலக்கு மசோதா,துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாக்கள் உள்ளிட்டவைகள் குறித்தும்,நாளை கலைஞர் […]