வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக,கூட்டாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு,சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு […]
தெலுங்கானா ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட். தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர்(கூடுதல் பொறுப்பு) டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், […]
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 23 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரு தினங்களுக்கு முன்பும் முடிவடைந்த நிலையில்,10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி,மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஒரு அறையில் 1 முதன்மைத் தேர்வாளர்,1 கூர்ந்தாய்வு அலுவலர், 6 முதுகலை […]
சென்னையில் முதன்முறையாக கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். கடந்த மாதம் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த […]
2-வது நாளான இன்றும் 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான நேற்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்றும் 19 துறைகளின் […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடி ஈடுபட்டதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு. இன்று மோசடியில் பலர் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதனமான வழிகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்சப்பில் ஈரோடு ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து, அதிகாரிகளின் வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் படி,மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்தல் தொடர்பாக ஆணை வெளியிடப்படுகிறது.அதன்படி,ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும். முதல்வர் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட்டது.இதில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை,மாற்றுதிறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்டோர் சார் உறுப்பினர்களாக […]
சென்னையில் நாளை மலர்கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நாளை மலர்க்கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில், கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் கலந்து கொள்வோர் கட்டணம் செலுத்தி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 11-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை […]
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.இதில், பொதுத்துறை அமைச்சர்,விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட […]
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில்,கடந்த மே 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.இந்நிலையில்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.அந்த வகையில்,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல்,டீசல் விலையை திமுக அரசு குறைக்க வேண்டும் என நேற்று முன்தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்நிலையில்,திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை நாளை அல்லது ஜூன் 4-ஆம் தேதி வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,திருச்சியில் செய்தியாளர் […]
தமிழ்நாட்டில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல்,கரூர்,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும்,தென் கிழக்கு […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சி குறித்து விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டது. மோடியின் ஆட்சியில் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை. அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் […]
குரூப் 1 முதுநிலை தேர்வு மாதிரி விடைகள் குறித்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. குரூப் 1 முதுநிலை தேர்வு மாதிரி விடைகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனவரி 2021-ல் நடந்த குரூப் 1 தேர்வில் 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகளில் 60 விடைகள் தவறாக இருந்ததை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே அமைத்த குழு ஒரு கேள்விக்கான […]
12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை […]
திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் தங்களில் யாருக்கு மூளை குறைவாக உள்ளது என்பதை காட்ட தினமும் போட்டியிடுகின்றனர் என அண்ணாமலைட்வீட். சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா […]
மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை சஸ்பெண்ட் செய்து ஆணையர் பிரகாஷ் உத்தரவு. மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில், பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கிறிஸ்துதாஸ் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடையும் வரை ஒய்வு பெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்திற்கு மத்தியில் பல இடங்களில் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, […]