கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

Cuddalore District Collector orders immediate evacuation of people living in coastal areas in Cuddalore district

கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையம் மற்றும் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.