ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை.!

சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா மாநாடு பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளை மறுநாள் நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025