இன்று மதியம் கரையை கடக்கும் பெய்ட்டி புயல்...! 90 கி.மீ முதல் 100 கி.மீ வரை காற்று வீசும் ...!வானிலை ஆய்வு மையம்

பெய்ட்டி புயலானது தற்போது காக்கிநாடாவில் இருந்து தெற்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை

பெய்ட்டி புயலானது தற்போது காக்கிநாடாவில் இருந்து தெற்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்,  மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் பெய்ட்டி புயலானது தற்போது காக்கிநாடாவில் இருந்து தெற்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது வடக்கு திசை நகர்ந்து இன்று மதியம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

இதனால் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையை பொருத்தமட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். புயல் கரையை கடக்கும் போது காக்கிநாடா பகுதியில் 90 கி.மீ முதல் 100 கி.மீ வரை காற்று வீசும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.