தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

AirIndiaExpress

திருச்சி :திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், சுமார் 2 மணி நேரமாக விமானத்திற்குள்ளேயே பயணிகள் காத்திருக்கின்றனர். விமானத்தில் 130 பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் பகல் 12 மணிக்கு ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.