வாகனப் பேரணி..! கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

PM Modi: பாஜக சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமருக்கு

Featured image

PM Modi: பாஜக சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணி செல்கிறார்.

Read More –தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

கோவையில் பாஜக வாகன பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளது.

Read More –வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் – தேர்தல் ஆணையம்

விமான நிலையத்திலிருந்து வாகனம் மூலமாக கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா, காந்திபுரம் நூறடிசாலை, சிவானந்தா காலனி வழியாக சாய்பாபா காலனிக்கு பிரதமர் மோடி வர உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.