இன்று தமிழகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி !!கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு !!

This news gives information about Prime Minister Narendra Modi to participate in a public rally in Tamil Nadu

இன்று பிரதமர் நரேந்திர மோடி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கட்சிகள் பங்கேற்கின்றது.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.பின்னர்  சென்னை வண்டலூரில்  இன்று பிரதமர் நரேந்திர மோடி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல்  அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி கட்சிக்கு தலா  ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கட்சிகள் பங்கேற்கின்றது.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

எனவே தேமுதிக இந்த கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பெரிதாக எழுந்துள்ளது.