சூர்யவம்சம் படம் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்: சரத்குமார்

Sarathkumar: சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கியது போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் என சரத்குமார் பேட்டி.

Featured image

Sarathkumar: சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கியது போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் என சரத்குமார் பேட்டி.

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அண்மையில் பாஜகவுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து பாஜக சார்பில் தமிழ்நாட்டின் விருதுநகர் மக்களவை தொகுதியில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று ராதிகா அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி நிறைய திட்டங்களை நாட்டிற்காக செய்துள்ளார், இந்த தொகுதியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உணவு கிடைக்க பாடுபடுவேன் என்றார்.

Read More:மீண்டும் எய்ம்ஸ் செங்கலை கையில் எடுத்த அமைச்சர் உதயநிதி

சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, “நான் போட்டியிட்டாலும் ஒன்று தான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்று தான். அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது எனக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது போன்று தான், இந்த தொகுதிக்கு நல்லதொரு பிரதிநிதி வேண்டும்.

Read More –தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

சூர்யவம்சம் திரைப்படத்தில் படிக்காத நான், எப்படி என் மனைவியை கலெக்டர் ஆக்குவேனோ அது போல ராதிகாவை வெற்றி பெற வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையாக உழைப்போம், காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை.. மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்றார்.