ராகிங் – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

Anna University ordered to file affidavit not to engage in ragging.

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு.

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.www.antiragging.inஎன்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும்.www.amanmovement.orgஎன்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக்கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.