ராகுல் காந்தி தான் பிரதமர் ...!அதுல என்ன தவறு இருக்கு ..! மு.க.ஸ்டாலின் அதிரடி

நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ராகுல் காந்தியை முன்மொழிந்ததில் என்ன தவறு என்று   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ராகுல் காந்தியை முன்மொழிந்ததில் என்ன தவறு என்று   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் .ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.

இது பெரிதும் பேசப்பட்ட பொருளாக இருந்தது மட்டும் அல்லாமல் எதிர்க்கட்சியினர் மத்தியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  ராகுல் காந்தியை முன்மொழிந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் மோடி வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் .அதேபோல்  நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ராகுல் காந்தியை முன்மொழிந்ததில் என்ன தவறு?, ராகுலை வேண்டாம் என எந்த தலைவர்களும் கூறவில்லை  என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தான் பிரதமர் ...!அதுல என்ன தவறு இருக்கு ..! மு.க.ஸ்டாலின் அதிரடி