"ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது" – த.வெ.க. தலைவர் விஜய் பதிவு.!

டெல்லியில் எதிர்க்கட்சி எம்பி-க்கள் கைதுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து முதல் நபராக விஜய் குரல் கொடுத்துள்ளார்.

RahulGandhi - TVK Vijay‌

டெல்லி :மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்டோர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் நோக்கி டெல்லியில் நடத்திய பேரணியின் போது கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராகப் போராடிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலை நியாயமாகவும், அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாகவும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தனது எக்ஸ் பதிவில் விஜய், ” சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது” என்னு குறிப்பிட்டுள்ளார்.

unknown node