மழை பாதிப்பு; ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்!

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள மக்களுக்கு ₹1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்.

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள மக்களுக்கு ₹1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கபாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

கனமழையை தொடர்ந்து அதிக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின், சீர்காழி மற்றும் தரங்கபாடியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்ததார். இதற்கான அரசாணையை நேற்று வெளியிட்டுருந்தது.

அதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தமாக சுமார் 1,60,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தோராயமாக 16 கோடி ரூபாய் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பெற்றுக்கொள்ள, அந்தந்த குடும்ப அட்டைதாரர்களில் உள்ள நபர்கள் யாரேனும் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கபாடி தாலுக்காவில் உள்ள மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சீர்காழி அருகே மணி கிராமத்தில் ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா, எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் நிவாரணம் வழங்கி தொடங்கி வைத்தனர். இரு தாலுக்காவில் உள்ள 238 ரேஷன் கடைகளில் 1,61647 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.