சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..... ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு....

சென்னை வானிலை ஆய்வு மையம் , தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் , தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நீடிப்பதாகவும், இது மேலும் வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.