பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்!

பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தொடங்கும் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை ரஜினிகாந்த் நியமித்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்கப்பட்டதாகவும், பாஜக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து அர்ஜுன மூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும், அர்ஜுன மூர்த்தியுடன் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கட்சி சார்பாக எந்தொரு தொடர்ப்பும் வைக்கக்கூடாது என மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025