ரஜினிகாந்த்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு!! சந்திபில் துளிகூட அரசியல் இல்லை!!ரஜினிகாந்த்

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக-

இன்று நடிகர் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன், துளியும் அரசியல் இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

பின் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக+ பாமக  உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது.

நேற்று  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம்.நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தது  அதிமுக கூட்டணி கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

unknown node

இந்நிலையில் இன்று  தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் நடிகர் ரஜினிகாந்த் நேரில் நலம் விசாரித்தார்.அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய விஜயகாந்திடம் ரஜினி நலம் விசாரித்தார்.

இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்,அமெரிக்கா சென்ற சிகிச்சை சிகிச்சை பெற்று திரும்பிய நண்பர் விஜயகாந்தை நலம் விசாரிக்க வந்தேன்.நல்ல ஆரோக்கியத்துடன் விஜயகாந்த் இருக்கிறார்.நான் உடல்நலமில்லாமல் இருக்கும் போது ராமச்சந்திர மருத்துவமனையில் முதல் ஆளாக சந்தித்தது விஜயகாந்த தான்.

நல்ல நண்பர், உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன், துளியும் அரசியல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.