ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
unknown nodeவரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
இந்நிலையில் போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்.
ரஜினி மன்றத்தின் கொடி. படம், பெயரை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன் படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.
unknown nodeஇந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,ரஜினி கூறியிருப்பது போன்று அதிமுக அரசுதான் கோடை காலத்தில் கூட மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.அதனால் ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கும் .ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.