தீபாவளி பண்டிகை: வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்.!

தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ration tn

சென்னை : தீபாவளியை யொட்டி, தழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 27) செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் தமிழகத்தில் 24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர கடைகள் என மொத்தம் 34,774  நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், கடைகள் முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, அத்தியாவசிய பொருட்களைப் பெற்று வருகின்ற தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai